நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்

7

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பின்னர் ஹிந்தியில் மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‛தேரே இஸ்க் மெயின்' என்ற படத்தில் நடித்துள்ளார். நாயகியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான உணர்வுப்பூர்வமான காதல் கதையில் இப்படம் உருவாகிறது.

சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி படக்குழுவினர் மும்பையில் சிறிய அளவில் இரவு பார்ட்டியாக கொண்டாடினர். இதில் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், நாயகி கிர்த்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இவர்கள் தவிர்த்து நடிகைகள் மிருணாள் தாக்கூர், தமன்னா, பூமி பட்னேகர் போன்ற தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகைகளும் பங்கேற்றனர். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.

Latest Tamil News

இதுபற்றி எழுத்தாளர் கனிகா தில்லான் பார்ட்டி போட்டோக்களை பகிர்ந்து, “எங்கள் இதயங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கள் அசல் ராஞ்சனா வீட்டில் தனுஷ். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நிறைய மகிழ்ச்சி, பல நினைவுகளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement