நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயார்; ஆபரேஷன் சிந்தூர் உதாரணம் என்கிறார் அமித்ஷா!

மும்பை: "நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயாராக உள்ளது. இந்த உறுதிப்பாட்டிற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: சுயராஜ்யத்தை பாதுகாக்கும் பொறுப்பு இப்போது 140 கோடி இந்தியர்களிடம் உள்ளது. சுயராஜ்யத்தை நிலைநாட்ட போராட வேண்டிய நேரம் வந்த போது, நாங்கள் அதை செய்தோம்.
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயாராக உள்ளது. இந்த உறுதிப்பாட்டிற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம். தக்க நேரத்தில் எங்களது தலைமையும், படையும் நிரூபித்தது. எதிர்மறை எண்ணங்கள் என் மனதில் தோன்றும்போதெல்லாம், நான் வழக்கமாக மஹாராஷ்டிரா மன்னராக விளங்கிய சிவாஜியையும், பேஷ்வா பாஜிராவையும் பற்றி நினைப்பேன்.
மிகவும் பாதகமான சூழல்களுக்கு மத்தியில் அவர்கள், இறையாண்மை மிக்க ஓர் அரசை இங்கே நிறுவினார்கள். அது அவர்களால் முடிந்தது. அதை நினைத்துப் பார்ப்பேன். பாஜிராவின் சிலையை நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான இடம், இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி. இங்குதான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.



மேலும்
-
5 பவுன் தங்க நகை மாயம் வேலைக்கார பெண் மீது வழக்கு
-
வக்கீல் சங்க தலைவருக்கு வாட்ஸ்ஆப் காலில் மிரட்டல்
-
கங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா விமரிசை படம் மட்டும்
-
மாயனுாரில் பராமரிப்பு இல்லாத சின்டெக்ஸ் தொட்டி
-
காமராஜர் பிறந்த நாள் போட்டி கரூரில் வரும் 20ல் நடக்கிறது
-
மோசமான நிலையில் பஞ்சப்பட்டி சுகாதார வளாகம்