பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!

பாட்னா: பீஹாரில் பெரும் தொழிலதிபர், பா.ஜ., முக்கிய பிரமுகர் கோபால் கெம்கா, தமது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
பீஹார் மாநிலத்தில் பெரும் மருத்துவமனைகளை நடத்தி வரும் தொழிலபதிபர் கோபால் கெம்கா. இவர் பா.ஜ., முக்கிய பிரமுகர் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நல அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பவர்.
பன்கிபூர் கிளப்பில் இருந்து அவர் நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தமது அடுக்குமாடி குடியிருப்பின் முன் காரில் இருந்து கோபால் கெம்கா கீழே இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் கெம்கா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த எம்.பி. பப்பு யாதவ் உடனடியாக அவரது உடல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தார். அங்கு கெம்கா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர். இந்த சம்பவம் காவல்துறையின் அஜாக்கிரதையால் நிகழ்ந்தது என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து அவர் தமது எக்ஸ்வலை தள பதிவில் கூறி உள்ளதாவது:
பீஹாரில் காட்டு தர்பார் ஆட்சி உச்சத்தில் இருக்கிறது. மிக பெரும் மற்றும் பிரபல தொழிலதிபர் பாட்னாவில் காந்தி மைதானம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். பீஹார் போலீஸ் வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் கெம்கா மகன், குன்ஜன் கெம்காவும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும்
-
காவல்துறை தடம் புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!
-
மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்ரே!
-
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!
-
அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா: தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்!
-
காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!