உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில், அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது. காரில் திருமண விழாவிற்கு மணமகன் உட்பட ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது.
கல்லூரி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கவிழ்ந்தது. திருமண விழாவிற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்து மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
தமிழ்ப்பற்றை மீண்டும் வெளிப்படுத்தினார் பிரதமர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சி
-
அ.தி.மு.க., கொள்கை எதிரியா? இல்லையா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி
-
காவல்துறை தடம் புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!
-
மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்ரே!
-
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!