திருமா இன்றைய கேள்வி: விஜய்க்கு அ.தி.மு.க., கொள்கை எதிரியா? இல்லையா?

23

சென்னை: தினம் தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று நடிகர் விஜய்யை குறிவைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.



இது தொடர்பாக சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: செயற்குழு கூட்டத்தில், அவர் (விஜய்) அ.தி.மு.க.,வை பற்றி வெளிப்படையாக பேசியதாக தெரியவில்லை. கொள்கை எதிரிகள் பட்டியலில் அ.தி.மு.க., உண்டா? இல்லையா? என்பதை அவரது உரையில் புரிந்து கொள்ள முடியவில்லை. தி.மு.க., ஆளுங்கட்சி என்பதால் அதனை எதிர்ப்பது என்பது இயல்பான ஒன்று.


எல்லோரும் ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது வாடிக்கையான ஒன்று. அந்த அடிப்படையில் விஜய் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.,வை பற்றி ஏதும் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது.


கொள்கை ரீதியாக தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் தான் எதிரியாக வெளிப்படையாக விஜய் பேசி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.,வை விமர்சித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.,வும் எங்களுக்கு கொள்கை எதிரி பட்டியலில் தான் இடம் பெற்றிருக்கிறது என்று அவர் சொன்னதாக தெரியவில்லை. பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால், அதனை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement