அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி

ரம்பன்: அமர்நாத் யாத்திரையின் போது பஸ்கள் ஒன்றுடன், ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சம்பவம், இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. யாத்திரைக்கு பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும், முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ல் தொடங்கியது. 38 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆக.9ல் நிறைவு பெறுகிறது.
இந் நிலையில், அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்து பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. யாத்திரைக்கு செல்லும் பாதைகளில் பாரம்பரிய பஹல்காம் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் ரம்பன் மாவட்டத்தில் சந்தர்கோட் லங்கர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது ஒரு பஸ்சின் பிரேக் செயல் இழந்து விபத்து நிகழ்ந்தது. அடுத்தடுத்து 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதின.
இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போலீசாரும், மருத்துவக்குழுவினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
காவல்துறை தடம் புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!
-
மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்ரே!
-
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!
-
அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா: தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்!
-
காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!