களைகட்டியது புரி ஜெகந்நாதர் கோவில் பஹூதா யாத்திரை; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புரி: ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோவிலின் பஹூதா யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த ஜூன் 27ம் தேதி கோலாகமாக துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பாலபத்ரா, தேவி சுபத்ரா, ஜெகந்நாதர் உள்ளிட்ட தெய்வங்கள், அவரவர் தேர்களில் அமர வைக்கப்பட்ட பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை கொண்டு செல்லப்பட்டது. 9 நாட்களுக்குப் பிறகு, ரதங்கள் இன்று (ஜூன் 5) மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஹூதா யாத்திரை (திரும்பி வருதல்) எனப்படும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேள தாளங்கள் இசைக்க, மும்மூர்த்திகளையும் அவரவர் தேர்களில் அமர வைக்கப்பட்டு, 'ஜெய் ஜெகந்நாத்' என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை கோவிலை நோக்கி இழுத்தனர்.
கடந்த ஜூன் 29ம் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,150 ஒடிசா போலீஸாரும், 800 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 10,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல, 275 ஏ.ஐ., கேமராக்களும், டிரோன்களையும் கொண்டு கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆலோசனைக்கூட்டம்
-
மாட்டுபட்டிக்கு சென்ற படையப்பா
-
கண்மாய் கரையோரம் ரூ.1.28 கோடியில் ரோடு அமைக்கும் பணி துவக்கம் ' தினமலர் ' செய்தி எதிரொலி
-
பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு...: கிடப்பில் போடப்பட்ட சோலார் வேலி, அகழி அமைக்கும் திட்டம்
-
எஸ்.யூ.எம்.பள்ளி விளையாட்டு விழா
-
காங்கிரஸ் சார்பில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
Advertisement
Advertisement