புது பஸ் ஸ்டாண்ட் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணை; மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி : புது பஸ் ஸ்டாண்ட் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடியில் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்டை காங்., மாநிலை தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் நேற்று பார்வையிட்டனர்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள வசதிகள் குறித்து பயணிகளிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பயணிகள், நாங்கள் அமர்வதற்கு கூட இடமில்லை. வாகனங்களை வெயிலில் நிறுத்த வேண்டியுள்ளது. அவசரத்துக்கு பொருட்களை வாங்க முடியாமல், பஸ் நிலையத்துக்கு வெளியில் செல்ல வேண்டியுள்ளது என, சரமாரியாக புகார்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து பஸ், ஆட்டோ, டெம்போ டிரைவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது டிரைவர்கள், தங்குமிடம், ஓய்வு அறைகள் ஒதுக்கவில்லை. பஸ்சை நிறுத்தி வைத்தால் உடனடியாக வெளியே எடுங்கள், இல்லாவிட்டால் வழக்கு பதிவோம் என மிரட்டுகின்றனர் என்றனர்.
பின், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி ரூ.15 கோடிக்கு திட்டமிடப்பட்டது. தற்போது ரூ.31 கோடியில் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. இதில் மெகா ஊழல் நடந்துள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை மத்திய கட்டுமான கழகம் செய்யும் என்றனர்.
ஆனால் சென்னையை சேர்ந்த அமல்ராஜ் என்பவரிடம் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக நான் கூறினேன். அதை மறுத்தனர். மத்திய கட்டுமான கழகமே சப் காண்ட்ராக்டாக அமல்ராஜிடம் பணி வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
கட்டுமான பணியில் நடந்துள்ள ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நகர பகுதியில் 9 பாலங்கள் கட்டப்படுகிறது. இதற்கு ஒப்பந்ததாரர் அமைச்சருக்கு வேண்டியவர். இதிலும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், காங்., சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்' என்றார்.
மேலும்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு