பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்

21


புதுடில்லி: பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர் என ஆளும் பா.ஜ., அரசு மீது காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

பீஹார் மாநிலம் பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டது குறித்து ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை சுட்டுக் கொன்றது, பா.ஜ.,வும், முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.



இன்று, பீஹார் கொள்ளை, துப்பாக்கிச்சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் நடப்பது இங்கே வழக்கமாகிவிட்டது. இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க முடியாது.


ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும், மாற்றத்திற்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீஹாருக்கான நேரம். அங்கு முன்னேற்றம் இல்லை, பயம் இல்லை. இந்த முறை ஓட்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீஹாரை காப்பாற்றுவதற்கும் ஆகும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement