பள்ளி வேனில் தீ-- விபத்து *அசம்பாவிதம் தவிர்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பள்ளி வேன் இன்ஜினில் தீ பற்றிய விபத்தில் . உடனடியாக மக்கள் தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதுகுடி அருகே ஏஞ்சல் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் அருப்புக்கோட்டை தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஊர் திரும்பினர்.

ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி நகர் அருகே வந்த தபோது வேனின் இன்ஜினில் கரும்புகை வெளியேறி சில நொடிகளில் தீப் பற்றியது.

உடனடியாக வேனில் இருந்த 30-க்கும் அதிகமான மாணவர்களை ஆசிரியர்கள் வெளியேற்றினர். அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், பொது மக்கள் தண்ணீர் மற்றும் ஆட்டோக்களில் இருந்த தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர்.

ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இன்ஜின் சூடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் அனைவரின் உடனடி முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement