கொலை முயற்சி வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது

பாகூர், : கிருமாம்பாக்கத்தில் கார் டிரைவர் கொலை முயற்சி வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபரை, போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஏழு கத்திகளை பறிமுதல் செய்தனர்.
கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 25; கார் டிரைவர். இவர், கடந்த ஏப்., 1ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி 27; தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அதனை தடுக்க முயன்ற அவரது தாய் இந்துமதிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரிஜ் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து புகழேந்தி, சிவபாலன் 25; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த புகழேந்தியின் கூட்டாளியான பண்ருட்டி அடுத்த சித்தரசூர் பிரதீப், 20; என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரதீப்பை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்து ஏழு கத்திகளை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு