அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரிய அழகிய மசோதா எனப்படும் அரசின் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், அதை எதிர்த்து வந்த தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை துவங்கியதாக நேற்று அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இந்தாண்டு ஜனவரியில் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்திறன் துறையின் தலைவராக நியமித்தார். அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதே இத்துறையின் நோக்கம்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் பெரிய அழகிய வரி என்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதில் மக்களுக்கான வருமான வரி, தொழில் வரி குறைப்பு, மின்சார கார்களுக்கான சலுகை நீக்கம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அரசின் கடன் உச்சவரம்பை உயர்த்த அனுமதிக்கும் சட்டப்பிரிவும் இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் செயல்திறன் துறை தலைவர் பதவியை எலான் மஸ்க் ராஜினாமா செய்தார்.
தற்போது இந்த மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறியது. அதிபர் டிரம்பும் நேற்று முன் தினம் ஒப்புதல் வழங்கினார்.
இதனால் தன் சவாலை நிறைவேற்ற புதிய கட்சி துவங்கி உள்ளார் எலான் மஸ்க். முன்னதாக இது குறித்து, சமூக வலைதளத்தில் மக்களிடம் அவர் கருத்து கேட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், 'மூன்றில் இரண்டு பங்கினர் புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
நம் நாட்டை வீண்செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது' என, கூறியுள்ளார்.
மேலும்
-
மும்பை தாக்குதல் சதிகாரர் ராணா விசாரணையில் கூறிய திடுக் தகவல் என்ன?
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர ஏற்பாடு!
-
அச்சு ஊடகங்களே அதிகப்படியான நம்பகக்தன்மை வாய்ந்தவை; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டு!
-
மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டும் முதல்வர் ஸ்டாலின்; அன்புமணி ஆவேசம்
-
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு; தடையை மீறி போராடுவேன் என்கிறார் சீமான்