மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

புதுடில்லி: ''மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்,'' என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த 'எல்லைகளுக்கு அப்பால்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக, உலகம் முழுவதும் மோதல் சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு
@quote@போர்களின் பின்னணியில் எந்த நேரத்திலும் 3ம் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய போரில், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறிவைக்கப்படுகிறார்கள். quote
சர்வாதிகாரம்
இதற்கெல்லாம் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்னையை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த பிரச்னைகள் அனைத்தும் உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் சர்வாதிகாரம், நல்லிணக்கம் மற்றும் அன்பை அழித்து வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன.
புத்தரின் பூமி
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டாங்கிகள் மற்றும் பிற வகை விமானங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.
@quote@ உலகிற்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியை வழங்கிய புத்தரின் பூமி இந்தியா.quoteஇப்போது உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலை நிலவுகிறது. சர்வதேச முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, விவாதங்களுக்குப் பிறகு எதிர்காலக் கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.


மேலும்
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு: பேரிடராக அறிவித்த டிரம்ப்
-
பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 8 பேர் பரிதாப பலி: 30 பேர் காயம்
-
இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்
-
கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை
-
டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது
-
அஜித்குமார் மரண வழக்கு: த.வெ.க. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி