போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனத்திற்கு

இங்கே நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் எதுவும் அரசியல் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்று எண்ணிவிட வேண்டாம். அன்றாடம் காலை வேளையில் அலுவல்களுக்கு செல்வோரின் வாகனங்கள்தான் இவை.

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சுற்றிவிடப்படும் வாகனங்கள் அனைத்தும் சந்திக்கும் இடமாக, தி.நகர்,ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை சிக்னல் மாறிவிட்டது. இந்த இடத்தை கடப்பதற்குள் வாகன ஒட்டிகளுக்கு போதும் போதுமென்றாகிவிடுகிறது. போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த இடத்தில் சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement