துறைமுகத்திற்கு ரூ.500 கோடி வருவாய்

சென்னை, 'ஹூண்டாய்' நிறுவன கார் ஏற்றுமதியால், சென்னை துறைமுகத்திற்கு 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

சென்னையை ஒட்டி ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் 'ஹூண்டாய்' நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளில், 'கிரெட்டா, கிரெட்டா எலக்ட்ரிக், ஐ10, ஐ20' உள்ளிட்ட வகைகளில் 46 லட்சம் கார்களை, உற்பத்தி செய்துள்ளது.

இவற்றை வெளிநாடுகளுக்கு கப்பல்களில் அனுப்புவதற்கு வசதியாக, சென்னை துறைமுகத்திற்குள், 6,000 ஹூண்டாய் கார்களை நிறுத்த, பிரத்யேக இடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில், சென்னையில் ஏற்றுமதி செய்யப்பட்ட இந்நிறுவன கார்களில் இருந்து, துறைமுக ஆணையம் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இதில், சரக்கு கப்பல் கட்டணங்கள், கப்பல் தாமத கட்டணங்கள் ஆகியவையும் அடங்கும். தென் கொரியாவை தொடர்ந்து, ஹூண்டாய் கார் நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதி மையமாக சென்னை உள்ளது.

Advertisement