நிகிதா மீது மேலும் ஒரு மோசடி புகார்

சென்னை, போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கில் சிக்கியுள்ள நிகிதா மீது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 48 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில், இவர் மோசடி செய்ததாக பல புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், நேற்று எழும்பூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில், எழும்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், அளித்த புகார்:

மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கவியரசு, அவரது தங்கை நிகிதா, தாய் கவியரசுஆகியோர் சேர்ந்து, தலைமைச் செயலகத்தில்துணை முதல்வரின் உதவியாளர் தனக்கு நெருக்கமானவர், அவர் வாயிலாக, உங்களது மனைவிக்கும், மைத்துனருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

இதை நம்பி, 48 லட்சம் ரூபாய் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தராமல் அலைக்கழித்தனர்.

ஒரு கட்டத்தில், இந்த மூவரிடம் மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள், அவரவர் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து இருப்பதும், போலீசார் இவர்களை தேடி வருவதும் தெரியவந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement