சிறுவன் கடத்தல் வழக்கில் 5 பேரை விசாரிக்க அனுமதி

சென்னை, சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஐந்து பேரை, இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காதல் ஜோடியை பிரிக்கும் விவகாரத்தில், திருவாலங்காடு அருகே, களாம்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார்.

இதுதொடர்பாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தை வனராஜ், 55, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் மகேஸ்வரி, 48.

புரட்சி பாரதம் கட்சியைச்சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார், 37, உள்ளிட்ட ஐந்து பேரை, திருவாலங்காடு போலீசார் கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள், வனராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஐந்து பேரையும், இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிவழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Advertisement