துணை முதல்வர் இன்று கரூர் வருகை

கரூர், கரூரில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, துணை முதல்வர் உதயநிதி இன்று வருகை தருகிறார். இதில் காலை, 10:00 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.


மதியம், 12:00 மணிக்கு கரூர் பிரேம் மஹாலில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். இதையடுத்து, 18,331 பயனாளிகளுக்கு, 162.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மாலை, 5:30 மணியளவில் கரூர் ராயனுாரில் நான்கு சட்டசபை தொகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், 16,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement