ரூ.11.10 லட்சத்துக்கு எள், பருத்தி விற்பனை



திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ராயர்பாளையம், வெள்ளிக்குட்டை, பல்லக்காபாளையம், கொடுமுடி, குமாரபாளையம் ஊர்களில் இருந்து, 6,212 கிலோ பருத்தி வரத்தானது. பருத்தி பிடி ரகம் குவிண்டால், 7,100 முதல் 7,455 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், நான்கு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும் அரூர், ஊத்தங்கரை, தலைவாசல், சங்ககிரி, ஈரோடு, தங்காயூர், கணக்கம்பாளையம், வீரகனுார், ஆத்துார் பகுதிகளில் இருந்து, 153 மூட்டை எள் வரத்தானது. கருப்பு எள் கிலோ 106.80 முதல் 128.90 ரூபாய் வரையிலும், வெள்ளை எள், 84 முதல், 117.80 வரையிலும், சிகப்பு எள், 70 முதல் 117.90 ரூபாய் வரையிலும் விற்பனையானது. எள், பருத்தி சேர்ந்து 11 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement