சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்

66

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


@1brஇதுபற்றிய விவரம் வருமாறு:


திருப்பதி தேவஸ்தானத்தில உதவி நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர் ராஜசேகர் பாபு. அண்மையில் ஹிந்து மதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு மாறினார். மதம் மாறிய அவர், வாரம்தோறும் சொந்த ஊரான புத்தூர் சென்று அங்குள்ள சர்ச்சில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக தெரிகிறது.


திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபுவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த நிபந்தனையை ராஜசேகர் பாபு மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்.


இந் நிலையில், அறிக்கையின் அடிப்படையில் ராஜசேகர் பாபுவை தேவஸ்தான நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா பிறப்பித்து இருக்கிறார்.


முன்னதாக, இதே காரணங்களுக்காக தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 18 பேர் பணியிடம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement