ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!

புதுடில்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. மொபைல் போன் மட்டுமின்றி அது சார்ந்த சாதனங்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை தயாரிப்பில் நிகரின்றி விளங்குகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம், உலக அளவில் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ளார்.தற்போது, தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக உள்ள வில்லியம்ஸ், ஓய்வு பெறும் வரை, ஆப்பிள் வாட்ச் உற்பத்தியை சபிஹ் கான் மேற்பார்வையிடுகிறார்.
யார் இந்த சபிஹ் கான்?
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்தவர் சபிஹ் கான். 1966ம் ஆண்டு சபிஹ் கான், தனது பள்ளிப் படிப்பின் போது சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் பொறியியலில் பாட பிரிவில் இளங்கலைப் பட்டங்களையும், ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இவருக்கு பதவி உயர்வு வழங்கி புதிய பதவியில் ஆப்பிள் நிறுவனம் அமர்த்தி உள்ளது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சபிஹ் கானின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு
-
அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்
-
போலீசார் தாக்குதல் மா.கம்யூ., கண்டனம்
-
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று பவுர்ணமி பூஜை
-
இன்று குரு பவுர்ணமி கொண்டாட்டம் வேதம் படிக்கும் மாணவர்கள் கவுரவிப்பு
-
தலைமை செயலர் பற்றி அவதுாறு பா.ஜ., ரவிகுமாருக்கு முன்ஜாமின்