பஸ் படிக்கட்டில் சிக்கிய வேட்டியால் இழுத்து செல்லப்பட்ட மேஸ்திரி காயம்
குமாரபாளையம், குமாரபாளையத்தில், அரசு பஸ்சின் படிக்கட்டில் சிக்கிய வேட்டியால், இழுத்து செல்லப்பட்ட கட்டட மேஸ்திரி படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி, 70, கட்டட மேஸ்திரி. இவர் நேற்றுமுன்தினம் மாலை, 5:45 மணியளவில், தனது சுசூகி அக்செஸ் டூவீலரில், குமாரபாளையம் நகரில், பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோடு செல்லும் 8ம் நம்பர் எண் கொண்ட அரசு பஸ், இவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பழனிசாமியின் வேட்டி, பஸ் படிக்கட்டில் சிக்கி, சிறிது தூரம் இழுத்து சென்றது. இதனால் காலில் ரத்த காயங்கள், எலும்பு முறிவு ஏற்பட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் ஓட்டுனர் மகேஸ்வரனை கைது செய்தனர்.
மேலும்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
-
'விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்'
-
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம்: ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
-
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்