கரூரில் அறிவியல் பூங்கா இன்று திறப்பு
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவை, துணை முதல்வர் உதயநிதி இன்று திறந்து வைக்கிறார்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம், 5.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. இங்கு, 4.59 ஏக்கர் பரப்பளவில் பூங்கா கட்டுமான பணிகள் விறு, விறுப்பாக நடந்து வந்தது. அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகை, விண்வெளி ஆய்வுகள் சார்ந்த திறனை வளர்த்து கொள்ளும் வகையில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான கண்டுபிடிப்பு மையம், டைனோசர் போன்ற அரிய விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்கள், உடல் பயிற்சி கூடம், திரையரங்கம், ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கட்டப்பட்டுள்ளது. தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்.
மேலும்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
-
'விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்'
-
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம்: ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
-
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்