கழிவுநீர் வாய்க்காலில் புதரை அகற்ற எதிர்பார்ப்பு


கரூர், கரூர் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள, செடி கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-திருச்சி சாலை கொளந்தானுார் தெரசா கார்னர் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அதில், அதிகளவில் செடி கொடிகள் முளைத்துள்ளன. மேலும், கழிவுநீர் வாய்க்காலில் பல இடங்களில், மண் திட்டுக்கள் காணப்படுகின்றன.



இதனால், கடந்த மாதம் பெய்த மழையின் போது, திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், மழைநீர் சாலையில் ஓடியது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடி கொடிகள், மண் திட்டுக்கள், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement