கோவக்குளத்தில் தெரு விளக்குகள் பராமரிப்பு



கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிச்சம்பட்டி, கோவக்குளம் சாலை டவுன் பஞ்., மூலம் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகமான காற்று வீசி வருவதால், தெரு விளக்குகள் காற்றில் சேதம் ஏற்படுகிறது.


இதனால் சாலை வழியாக செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று டவுன் பஞ்., பணியாளர்கள் பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு, புதிதாக பொருத்தினர்.

Advertisement