சிவகாசியில் இளநிலை உதவியாளர் குழாய் திறப்பாளர் சஸ்பெண்ட்
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் கடமையை சரியாக செய்யாமல் வருவாய் இழப்பிற்கு காரணமாக இருந்த இளநிலை உதவியாளர் செந்தில் குமாரையும் 45, நகரமைப்பு மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த குழாய் திறப்பாளர் முத்துவேல் பாண்டியனையும் 52, சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சரவணன் உத்தரவிட்டார்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவர் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாநகராட்சியில் குழாய் திறப்பாளர் முத்துவேல் பாண்டியன்.
இவர் பொறியியல் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சில ஆண்டுகளாக வாகன காப்பகம், சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளுக்கு வசூல் செய்து வந்தார்.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததையடுத்து இவரை கமிஷனர் மீண்டும் குழாய் திறப்பாளராக பணிபுரிய உத்தரவிட்டார். இதற்கு அலுவலகத்தில் நகரமைப்பு மேற்பார்வையாளராக பணி புரியும் முத்துராஜ் தான் காரணம் என கருதிய முத்துவேல் பாண்டியன் அரிவாளுடன் அலுவலகத்திற்கு வந்து முத்துராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரையும் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே முத்துராஜ் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததையடுத்து முத்துவேல் பாண்டியனை போலீசார் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
-
'விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்'
-
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம்: ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
-
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்