கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு

போடி: தஞ்சாவூர் அருகே அம்னிசத்திரம் பேராவூரணியை சேர்ந்தவர் அஜீஸ்கான் 32. பொறியாளராக பணியாற்றிவருகிறார்.

இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடி அருகே கரையான்பட்டியில் வசிக்கும் தமிழ் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான 78 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார்.

அஜீஸ்கான் நேற்று அவரது நிலத்தில் உழவு செய்துள்ளார். அப்போது அஜீஸ்கான் வாங்கிய நிலத்திற்கு பணம் தரவில்லை என கூறி தமிழ் கருப்பசாமி, உறவினர் பொன்னுத்தாய் இருவரும் சேர்ந்து அஜீஸ்கானை தகாத வார்த்தையால் பேசி, உழவு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

அஜீஸ்கான் புகாரில் போடி தாலுாகா போலீசார் தமிழ் கருப்பசாமி, பொன்னுத் தாய் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement