டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு

வாஷிங்டன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய டெக்சாஸ் பகுதியில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை வெள்ள பாதிப்பால் 120 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 161 பேர் காணவில்லை. உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சூழலில், வெள்ள பாதிப்புகளை அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். பேஸ்பால் தொப்பி மற்றும் சூட் அணிந்திருந்த டிரம்ப் கள அதிகாரிகள் கூறிய விளக்கத்தை கேட்டறிந்தார்.
நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும்
-
அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி
-
‛‛இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்...'': கண்ணீர் மல்க ‛புது குண்டு' போட்ட வனிதா
-
உலக தலைவர்கள் பேச்சு: நாகரீகம் போச்சு!
-
இந்தியாவின் சக்திகள் இரண்டு; ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம்: பிரதமர் மோடி
-
செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாவை மேம்படுத்த கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்
-
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு