தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் மாணவி பதக்கம் வென்று சாதனை

கடலுார் : ஹரியானா மாநிலத்தில் நடந்த 20வது தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில், கடலுார் மாணவி அணிப்போட்டியில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.

ஹரியான மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் இருபதாவது தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டி நடந்தது. அதில் ஆண்கள், பெண்கள் அணிப்போட்டி, தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டிகள் நடந்தது. கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தமிழ்விழி, தமிழக அணி சார்பில் பங்கேற்று மகளிர் அணிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும், மகளிர் இரட்டையர் போட்டியில் தமிழ்விழி மற்றும் நறுமுகை வெண்கல பக்கம் வென்று சாதனை படைத்தனர். தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்று கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி தமிழ்விழியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் சாப்ட்ட டென்னிஸ் சங்க செயலாளர் சித்ரா அப்பாதுரை, சங்க தலைவர் கிருஷ்ணசாரதி மற்றும் பயிற்சியாளர் அப்பாதுரை வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement