மாநில அட்யா பட்யா விளையாட்டு போட்டி கடலுார் மாவட்ட அணிக்கு சான்று வழங்கல்

விருத்தாசலம் : பெரியகுளத்தில் நடந்த அட்யா பட்யா மாநில அளவிலான போட்டியில், கடலுார் மாவட்ட அணிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


19வது சப் ஜூனியர் மாநில அளவிலான அட்யா பட்யா (கிளித்தட்டு) சாம்பியன்ஷிப் போட்டிகள், தேனி மாவட்டம், பெரியகுளம், நல்லகருப்பன் பட்டி, மேரி மாதா கல்லுாரியில், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதிகள் நடந்தது. மாநில அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆண், பெண் அணிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.


இதில், கடலுார் மாவட்ட அட்யா பட்யா சங்கம் சார்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தீபக், சாய்சரண், கமலேஷ், வாசுதேவன், தீபன்ராஜ், பிரசன்னா, ஹரிஹரன், ஹனீஷ் கமலேஷ், சுதாகர், ஆகாஷ், பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணபிரியன், அனீஸ், ஒறையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மிதுல் கிருத்திக் ஆகியோர் பங்கேற்றனர்.



அதில், கடலுார் மாவட்ட அணி காலிறுதி போட்டியில் போராடி, தோல்வியடைந்தது. இதையடுத்து, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வினோத்குமார் சான்றிதழ் வழங்கி, அடுத்தடுத்த போட்டகளில் வெற்றி பெறலாம் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பயிற்சியாளர் மனோகர், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம் உடனிருந்தனர்.

Advertisement