இதுவரை 17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்

புதுடில்லி: வெளிநாட்டு பார்லிமென்டுகளில் இதுவரையில் காங்கிரஸ் பிரதமர்கள் 17 முறை உரை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் மோடி மட்டும் 17 நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றி, உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய பிரதமர் என்பதை உறுதி செய்துள்ளதாக பா.ஜ., பெருமிதம் தெரிவித்துள்ளது.
கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று நமீபியா சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது, அந்நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நமீபியா நாட்டின் பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன்மூலம், பல ஆண்டுகளாக காங்கிரஸ் பிரதமர்கள் செய்த செயலை, இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனியொரு ஆளாக செய்துள்ளார்.
வெளிநாட்டு பார்லிமென்டுகளில் இதுவரையில் காங்கிரஸ் பிரதமர்கள் 17 முறை உரை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் மோடி மட்டும் 17 நாடுகளின் பார்லிமென்டின் உரையாற்றியுள்ளதாக பா.ஜ., பெருமிதம் தெரிவத்துள்ளது.
இது குறித்து பா.ஜ., வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், "இந்த சுற்றுப்பயணத்தின் போது, கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளின் பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் 17 நாடுகளின் பார்லிமென்ட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஒட்டுமொத்தமாகவே 17 நாடுகளின் பார்லிமென்டுகளில் உரையாற்றியுள்ளனர். உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய தலைவர்களில் ஒருவர் என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்," என தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் பிரதமர்களான மன்மோகன் சிங் 7 முறையும், இந்திரா காந்தி 4 முறையும், நேரு 3 முறையும், ராஜிவ் 2 முறையும், பி.வி.நரசிம்மா ராவ் ஒரு முறை என மொத்தம் 17 நாடுகளின் பார்லிமென்டில் உரைநிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (12)
ராமகிருஷ்ணன் - ,
10 ஜூலை,2025 - 20:09 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
10 ஜூலை,2025 - 17:47 Report Abuse

0
0
vivek - ,
10 ஜூலை,2025 - 21:45Report Abuse

0
0
Reply
சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க - ,இந்தியா
10 ஜூலை,2025 - 16:53 Report Abuse

0
0
Reply
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
10 ஜூலை,2025 - 13:39 Report Abuse

0
0
Reply
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
10 ஜூலை,2025 - 08:37 Report Abuse

0
0
Senthoora - Sydney,இந்தியா
10 ஜூலை,2025 - 08:56Report Abuse

0
0
Arunkumar,Ramnad - ,
10 ஜூலை,2025 - 09:07Report Abuse

0
0
Reply
சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க - ,இந்தியா
10 ஜூலை,2025 - 08:26 Report Abuse

0
0
vivek - ,
10 ஜூலை,2025 - 09:04Report Abuse

0
0
செல்வேந்திரன்,அரியலூர் - ,
10 ஜூலை,2025 - 09:11Report Abuse

0
0
சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க - ,இந்தியா
10 ஜூலை,2025 - 09:36Report Abuse

0
0
Reply
மேலும்
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Advertisement
Advertisement