மனைவி கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக கணவன்
திருப்பத்துார் : நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உடையராஜாபாளையத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், 32; கூலி தொழிலாளி. இவர் மனைவி சுமதி, 28. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சுமதி அடிக்கடி மொபைல் போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது நடத்தையில் சத்யராஜுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில், சத்யராஜ் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியில் சுமதி உயிரிழந்து விட்டார். ஆம்பூர் தாலுகா போலீசார், சத்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்