ஒழுங்கா வேலை செய்யல ரயிலையும் கடத்தல... சிக்கினார் விரக்தி வாலிபர்
ஜோலார்பேட்டை : ஈரோடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிற்கு, கடந்த, 7 இரவு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அன்றிரவு, ரயில், 11:50 மணிக்கு மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சென்றது.
அப்போது, அங்கிருந்த ஒருவர் அவசர உதவி எண், 100க்கு போன் செய்து, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார், மொரப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மிரட்டல் விடுத்த மொபைல் எண்ணை ஆய்வு செய்தனர். அதில், மிரட்டல் விடுத்த நபர், அதே ரயிலில் முன்பதிவு செய்யாத பொதுப்பெட்டியில் பயணம் செய்வது தெரிந்தது.
அதன்படி ரயில்வே போலீசார், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் ரயில், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் கடந்து, காட்பாடி நோக்கி சென்றது. அங்கு, காட்பாடி ரயில்வே போலீசார், ரயிலில் இருந்த அந்த வாலிபரை பிடித்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றர்.
அவர் தர்மபுரி அடுத்த அம்மாசி கொட்டாய், நந்தி நகரைச் சேர்ந்த சபரீசன், 25, என்பதும், அவர், 2021ம் ஆண்டு, தமிழ்நாடு மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்த சபரீசன், பணியில் அலட்சியமாக இருந்ததால் நீக்கப்பட்டு, தற்போது வேலையின்றி இருப்பதும் தெரிந்தது.
சென்னையில், தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் அருகே நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், வேலை இல்லாத விரக்தியில் ரயிலை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது.
காட்பாடி ரயில்வே போலீசார், சபரீசனை, சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், சபரீசனை கைது செய்தனர்.
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்