விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்

3

புதுடில்லி: விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அங்கு வெந்தயம், பச்சை பயிறு நாற்று வளர்த்து வருகிறார்.


அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார். அங்கு அவர், வெந்தயம், பச்சை பயிறு வளர்த்து வருகிறார்.



பெட்ரி டிஷ்களில் முளைக்கும் பச்சைப்பயறு மற்றும் வெந்தய விதைகளின் புகைப்படங்களை எடுத்து, விதை முளைப்பு மற்றும் தாவர வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தை நுண் ஈர்ப்பு விசை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வை சுக்லா மேற்கொண்டு உள்ளார்.

மகிழ்ச்சி




இதற்கிடையே, ஆக்ஸியம் ஸ்பேஸ் தலைமை விஞ்ஞானி லூசி லோவுடனான ஒரு உரையாடலில் சுக்லா கூறியதாவது: இஸ்ரோ, நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக நான் நிலையத்தில் செய்து வரும் சில அற்புதமான ஆராய்ச்சிகளை கொண்டு வர முடிந்தது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதைச் செய்வது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது," என்றார்.

முளைகள் பரிசோதனையை தார்வாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாடு இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் வழிநடத்துகின்றனர்.


பூமிக்குத் திரும்பியதும், விதைகள் பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு, அவற்றின் மரபியல், நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மற்றொரு பரிசோதனையில், சுக்லா நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி சேமித்து வைத்தார், அவை உணவு, ஆக்ஸிஜன் மற்றும் உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக ஆராயப்படுகின்றன.


@block_P@

14 நாட்கள் ஆய்வு

ஜூன் 27ம் தேதி முதல் குழுவினர் தங்கள் அறிவியல் ஆய்வுகளைத் தொடங்கியதால், 14 நாட்கள் ஜூலை 10ம் தேதியுடன் முடிவடையும். ஜூலை 14ம் தேதி அவர்கள் பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை டிராகன் விண்கலத்தின் செயல்பாடுகளை பொறுத்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.block_P

Advertisement