காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது

திருப்பூர்; தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம், காற்றின் வேகம் தாங்காமல் அடியோடு விழுந்து சேதமானது.

தாராபுரம், பொள்ளாச்சி ரோடு, சீலநாயக்கன்பட்டியில் சிலுவன்காட்டில் பிரபு என்பவரின் தோட்டத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை இயந்திரம் ஒன்று இயங்கி வந்தது. இதனை, மாதாந்திர பராமரிப்பு பணிகளை, ஏ.எம்.எஸ்., என்ற தனியார் பராமரிப்பு நிறுவனம் கவனித்து கொண்டிருந்தது.

இச்சூழலில், நேற்று காலை காற்றின் வேகம் தாளாமல் காற்றாலை இயந்திரம், அடியோடு முறிந்து கீழே விழுந்து, ஆறு துண்டுகளாக சிதறியது.

இதனால், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. காற்றாலைகளை முறையாக பராமரித்து வருகின்றார்களா என்று, வருவாய்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement