திருப்பூருக்கு முதல்வர் வருகை; அமைச்சர் - கலெக்டர் ஆலோசனை

திருப்பூர்; தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும், 22 மற்றும் 23ம் தேதி திருப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் வருகை தொடர்பாக அமைச்சர் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அவ்வகையில், வரும், 22 மற்றும் 23 ம் தேதிகளில், திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 22ம் தேதி கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் திறந்து வைக்கும் முதல்வர், 23ம் தேதி உடுமலையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், முதல்வர் பங்கேற்றும் நிகழ்ச்சிகள், அது தொடர்பாக முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement