என்.ஜி.ஆர்., ரோடு நெரிசலுக்கு தீர்வு

பல்லடம்; பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் ஏற்பட்டு வரும் நெரிசலுக்கு, போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என, வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்லடம் வியாபாரிகள் சங்கத்தின் செயல் தலைவர் பானு பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் விமல் பழனிசாமி, நடராஜன், விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, கறிக்கோழி பண்ணை, சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள் என பலதரப்பட்ட தொழில்கள் நடந்து வருகின்றன. இவற்றைச் சார்ந்து, பல லட்சம் தொழிலாளர்கள், பல்லடம் வட்டாரத்தில் வசிக்கின்றனர்.
இவ்வாறு தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பல்லடத்தின் இதயப்பகுதியாக உள்ள என்.ஜி.ஆர்., ரோட்டில், தினசரி மார்க்கெட், வணிக வளாகங்கள், உழவர் சந்தை, வார சந்தை என, அனைத்தும் உள்ளன.
இதனால், வட்டாரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், அதிகப்படியான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார சந்தை நடைபெறும் திங்கட்கிழமை நாட்களில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்ட என்.ஜி.ஆர்., ரோடு, இன்று, நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
வார சந்தை நாட்களில், வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் வியாபாரிகள் பலர், ரோட்டை ஆக்கிரமித்து நடமாடும் கடை அமைத்துக் கொள்கின்றனர்.
போதாக்குறைக்கு, மைக் செட்டுகள் வைத்து அலப்பறை செய்கின்றனர். நாங்கள் ஏதாவது கேட்கச் சென்றால், வீண் பிரச்னை எழுகிறது. ரோட்டின் இரு திசைகளில் இருந்தும் வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பார்க்கிங் வசதி இன்றி ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. இது குறித்துபுகார் தெரிவித்தால், உடனே, பேரி கார்டு வைத்து ரோட்டை மூடி விடுகின்றனர்.
எனவே, வாரச்சந்தை மற்றும் விசேஷ நாட்களில், என்.ஜி.ஆர்., ரோட்டில் போலீசாரை நியமித்து, போக்குவரத்து, பார்க்கிங் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்.
என்.ஜி.ஆர்., ரோட்டில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவதால், நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும். எனவே, போலீசார், நகராட்சி நிர்வாகம், இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும்
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை