'சேரா ஹோம் ஜங்ஷன்' சுந்தராபுரத்தில் திறப்பு

போத்தனூர்; கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுந்தராபுரத்தில், 70 ஆயிரம் சதுரடியில் வீட்டு உபயோக பொருட்களுக்கான பிரத்யேக ஷோரூம், சேரா ஹோம் ஜங்ஷன் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று இதன் திறப்பு விழா, மார்ட்டின் ஹோமியோபதி கல்லுாரி தாளாளர் லீமா மார்ட்டின் தலைமையில் நடந்தது.

ஜோஸ் டைசன் மார்ட்டின், முதன்மை அலுவலர் (செயல்பாடு) ஜார்ஜ் மார்ஷல், நடிகர் அசோக் செல்வன், நடிகை பிரியா வாரியர், பொது மேலாளர் சுந்தரவடிவேல் குத்துவிளக்கேற்றினர். பர்னிச்சர் பிரிவை நடிகர் அசோக் செல்வன், எலக்ட்ரானிக்ஸ் பிரிவை நடிகை பிரியா வாரியர் திறந்து வைத்தனர்.

குழுமத்தின் பொது மேலாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது:

வீட்டு உபயோக பொருட்களுக்கென சுந்தராபுரம் பகுதியில், 70 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள முதல் ஷோரூம் இது. வங்கி கடனுதவியும் வழங்கப்படுகிறது.

வாகனங்கள் நிறுத்த தேவையான இடவசதி உள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு, வரும் ஞாயிறு வரை ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, தங்கம் அல்லது வெள்ளி நாணயம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார். வர்த்தக பிரிவு மேலாளர் நவீன் உடனிருந்தார்.

Advertisement