எட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

கோவை; பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, எட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை - மன்னார்குடி - கோவை (16616/16615) செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்று முதல், வரும், 31 வரை ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். கோவை - திருப்பதி - கோவை(22616/22615) வாராந்திர ரயில்களில் இன்று முதல், வரும், 31 வரை ஒரு ஏ.சி., பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.கோவை - நாகர்கோவில் (22668) எக்ஸ்பிரஸ் ரயில்களில், நாளை முதல், ஆக., 1ம் தேதி வரையும், நாகர்கோவில் - கோவை(22667) எக்ஸ்பிரஸ் ரயிலில், 12ம் தேதி முதல், ஆக., 2ம் தேதி வரையிலும், ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

கோவை - ராமேஸ்வரம் (16618) எக்ஸ்பிரஸ் ரயிலில், 15 முதல், வரும், 29ம் தேதி வரை, ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். அதேபோல், ராமேஸ்வரம் - கோவை(16617) எக்ஸ்பிரஸ் ரயிலில், 16 முதல், 30ம் தேதி வரை ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement