ஆன்லைன் மோசடி; 71 பேர் கைது

லாகூர்: பாகிஸ்தானில் ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபட்ட, 48 சீனர்கள் உட்பட 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் 'கால்சென்டர்' போர்வையில், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இந்த கும்பல் சுருட்டி வந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் சீனா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

Advertisement