ஒரே வாரத்தில் உடைந்த 'மேன்ஹோல்' மூடி

1

ராயபுரம் மண்டலம், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில், ராஜரத்தினம் மைதானம் உள்ளது. இதன் அருகே மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதை தடுக்க, இப்பகுதியில் கடந்த ஆண்டு புதிதாக மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இது, அமைத்த சில மாதங்களிலேயே வடிகால்வாய் மீது அமைக்கப்பட்ட 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்தது.

இதுகுறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதை அடுத்து, மேன்ஹோல் மூடி ஒரு வாரத்திற்கு முன் புதிதாக அமைக்கப்பட்டது. தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், மேன்ஹோல் மூடி மீண்டும் உடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தரமான வடிகால்வாய் மூடியை அமைக்க வேண்டும்.

Advertisement