அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?
தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் செல்லும் பைபாஸ் சாலையை ஒட்டி, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், குன்றத்துார் - -பல்லாவரம் சாலையில், அடையாறு கால்வாய் குறுக்கே கடந்து செல்லும் பைபாஸ் சாலையை ஓட்டி, சர்வீஸ் சாலை இல்லை. அங்கு, 100 மீட்டர் துாரத்திற்கு சர்வீஸ் சாலை இல்லாததால், தாம்பரத்தில் இருந்து சர்வீஸ் சாலை வழியே வரும் வாகனங்கள், குன்றத்துார் வழியே, கூடுதலாக 7 கி.மீ., துாரம் பயணித்து, கோவூர் அருகே மீண்டும் தாம்பரம்- - மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையை பிடிக்க வேண்டியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு நேரமும், எரிபொருளும் விரயமாகிறது. மேலும், குன்றத்துார் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, தாம்பரம் - -மதுரவாயல் பைபாஸ் சாலையில், குன்றத்துார் அருகே அடையாறு கால்வாயின் குறுக்கே, பாலத்துடன் கூடிய சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- கண்ணபிரான், குன்றத்துார்.
மேலும்
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை