கனடாவில் விமானப் பயிற்சியில் விபத்து; கேரள மாணவன் உள்பட இருவர் பலி

கனடா: கனடாவில் விமானப் பயிற்சியின் போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இந்திய மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் உள்ள விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ்,23 என்பவரும், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் என்பவரும் பயிற்சி பெற்று வந்தனர்.
நேற்று முன்தினம் (ஜூன் 8) இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ., தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றனர்.
அந்த சமயம் யாரும் எதிர்பாராதவிதமாக, 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளானது. உடனே தீயும் பற்றிக் கொண்டது. இதில், ஸ்ரீஹரி மற்றும் சவானா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
10 ஜூலை,2025 - 14:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement