பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மூடல் வாடிக்கையாளர்கள் அவதி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பி.எஸ்.என்.எல்.அலுவலகம் மூடபட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டுவருகின்றனர். .

நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் செயல்பட்டு வந்தது.அப்போது லேண்ட்லைன் தொலைபேசி மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. வாடிக்கையாளர்களின் தொலைபேசி பழுதானால் உடனடியாக ஊழியர்கள் வந்து சரி செய்தனர்.

அதேபோல் கட்டணம் செலுத்தும் வசதியும் இருந்தது.நாளடைவில் லேண்ட்லைன் போன் உபயோகம் குறைந்து முற்றிலும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு மாறினர்.இதனால் இங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு வேலை இல்லாததால் மாற்று வேலைக்கு அனுப்பப்பட்டனர். இங்கு செல்போன் கட்டணம் செலுத்துவது,புதிய சிம் கார்டு விற்பனை,பழுதான தொலைந்த சிம்கார்டுகளுக்கு மாற்று கார்டு வாங்குவது போன்ற பணிகள் நடந்துவந்தது.

கட்டணம் செலுத்துவது இப்போது ஆன்லைன் மூலமே அதிகளவு செய்கின்றனர்.இதனால் இங்கு இருந்த ஊழியர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார்.எனவே அலுவலகத்தில் எந்த பணியும் நடக்காததால் மிக பழமையான அலுவலகம் நிரந்தரமாக மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் எந்த வேலையாக இருந்தாலும் கடலுாருக்கு செல்ல வேண்டியுள்ளதால் சிரமபடுகின்றனர்.

Advertisement