சிதம்பரம் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, மருத்துவ அலுவலர் மிதுலைராஜன், சுகாதார ஆய்வாளர் அன்பரசு ஆகியோர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.

சிறப்பு விருந்தினராக, எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று ரத்தம் வழங்கி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முகாமில், துறைத் தலைவர்கள் அறிவழகன், ரவி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஷ்னுபிரியா, இளைஞர் செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளர்சுடர்மதி, திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன், தேசிய மாணவர்ப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஷ்னுபிரியா, நன்றி கூறினார்.

Advertisement