சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!

சென்னை: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவரை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர, ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ம.பி., உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரூ, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அசுதேஷ் குமார், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபுல் மனுபாய் பஞ்சோலி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தர்லோக் சிங் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து (1)
Jack - Redmond,இந்தியா
14 ஜூலை,2025 - 19:57 Report Abuse

0
0
Reply
மேலும்
-
போலி நன்கொடை விலக்குகள்: நாட்டின் பல்வேறு நகரங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு
-
ரூ.25,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர்: விரட்டி சென்று மடக்கி பிடித்த போலீசார்
-
ஆந்திராவில் ரூ.1000 கோடியில் ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம்: பிட்ஸ் பிலானி அறிவிப்பு
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்: 22 ரன்களில் இங்கிலாந்து அணி வெற்றி
-
விமான விபத்து முதற்கட்ட அறிக்கை எதிரொலி; போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்ய உத்தரவு
-
ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
Advertisement
Advertisement