துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

11

சென்னை: ஆன்மிக பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில் சொத்துகளை பாதுகாக்க கோரி, தொடர்ந்து போராடி வருபவர். இவர், தம்மை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என பெங்களூருவைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


தமக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், வழக்கில் அவர் கோரி இருந்தார். இந்த வழக்கில், விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்துள்ளது.


இதற்கான உத்தரவை நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்து உள்ளார். முன்னதாக இந்த வழக்கை மனுதாரரான துஷ்யந்த் ஸ்ரீதர், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், தாம் பெங்களூருவில் வசிப்பதால், வழக்கை சென்னையில் தொடங்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Advertisement