உலக விளையாட்டு செய்திகள்

கனடா கலக்கல்

புருனோ: செக்குடியரசில் நடக்கும் பெண்கள் (19 வயது) உலக கோப்பை கூடைப்பந்து தொடருக்கான 'ரவுண்டு-16' போட்டியில் கனடா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் கனடா அணி 70-58 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

அர்ஜென்டினா அபாரம்

குய்டோ: ஈகுவடாரில் நடக்கும் பெண்கள் கோபா அமெரிக்கா கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா, உருகுவே அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஈகுவடார் அணி 3-1 என, பெருவை வென்றது.


அமெரிக்கா 'ஹாட்ரிக்'

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடக்கும் உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் 'வாட்டர் போலோ' லீக் போட்டியில் அமெரிக்க பெண்கள் அணி 26-3 என அர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஏற்கனவே சீனா, நெதர்லாந்தை வென்ற அமெரிக்கா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.


உக்ரைன் ஆதிக்கம்


தெலாவி: ஜார்ஜியாவில் நடக்கும் பெண்கள் (19 வயது) ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் அணி 33-24 என, இத்தாலியை வென்றது. ஏற்கனவே பிரிட்டன், கொசோவோ, இஸ்ரேலை வீழ்த்திய உக்ரைன் தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது.


எக்ஸ்டிராஸ்

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று துவங்குகிறது. இதில் 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


* அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. இதில் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி உள்ளிட்ட 16 பேர் விளையாடுகின்றனர். 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் பங்கேற்கவில்லை.


* பஞ்சாப்பில் வரும் ஜூலை 27ல் இந்திய ஓபன் தடகள போட்டி நடக்கவுள்ளது. இதில் 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதால், போட்டிகள் இரண்டு நாட்கள் (ஜூலை 27-28) நடத்தப்படும் என இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்தது.


* தென் கொரியாவில், கிழக்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்கள் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பைனலில் தென் கொரிய அணி 2-0 என, சீனதைபே அணியை வீழ்த்தி கோப்பை வென்றது.

Advertisement