குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை

பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்த வயல்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி, வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில், குறுவை நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது 2 மாதங்கள் முடிந்த நிலையில் நெற்பயிர்களில் கதிர்கள் விட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகளும் துவங்கி உள்ளது.

இந்நிலையில், பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம், நந்திமங்கலம், பெ.பூவனுார், ஓ.கீரனுார், அரியராவி உட்பட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமான வயல்களை பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement