பஸ் கண்டக்டரிடம் பிரச்னை மாணவர்கள் சாலை மறியல்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், குருபீடபுரம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 8:15 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி அருகே டவுன் பஸ் வந்தது. அப்போது அங்கிருந்த மாணவர்கள் பஸ்சில் ஏறினர்.
மாணவர்கள் பஸ்சுக்குள் செல்வதற்கு பதில் படிக்கட்டிலேயே நின்றனர். இதனால் அரசு பஸ் கண்டக்டர், மாணவர்களை பஸ் உள்ளே செல்லுமாறு கூறியதால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த கண்டக்டர், பஸ்சை விட்டு கீழே இறங்கி நின்றார். மாணவர்களும் பஸ்சை விட்டு இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் காலை 8.30 மணிக்கு மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு பஸ்சில் ஏறி சென்றனர்.
மேலும்
-
அசைவ பால் அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்